Need help dealing with violent or distressing online content? Learn more

தமிழ் (Tamil)

இணையப் பாதுகாப்பு ஆலோசனை மற்றும் ஆதாரவளங்களைத் தமிழ் மொழியில் ஆய்வு செய்யவும்.

eSafety ஆணையர் (eSafety)

eSafety ஆணையர் (eSafety) என்பது ஆஸ்திரேலியாவின் இணைய பாதுகாப்புக்கான தனித்தியங்கும் ஒழுங்கமைப்பாகும். நாங்கள் ஓர் ஆஸ்திரேலிய அரசு நிறுவனமாகும். 

eSafety என்பது எல்லா ஆஸ்திரேலியர்களையும் இணையவழிக் கேடுகளிலிருந்து பாதுகாப்பாக வைத்திருக்க உதவுகிறது, அத்துடன் பாதுகாப்பான, அதிக நேர்மறையான இணைய அனுபவங்களைப் பெறுவதற்கான வழிகளையும் ஊக்குவிக்கிறது. அவதூறு அல்லது தீங்கினை மக்கள் அனுபவிக்கும் பெரும்பாலான இணைய தளங்கள் மற்றும் விவாத மன்றங்களில் (forums) ஆஸ்திரேலியர்களைப் பாதுகாக்க எங்களிடம் சட்டப்பூர்வ அதிகாரங்கள் உள்ளன.

இலவச இணையப் பாதுகாப்புச் செயல் திட்டங்கள் மற்றும் ஆதாரவளங்களையும் eSafety கொண்டுள்ளது. 

கடுமையான கேடு விளைவிக்கும் இணைய உள்ளடக்கத்தை அகற்ற eSafety உதவும். கடுமையான கேடு விளைவிக்கும் உள்ளடக்கத்தில் பின்வருவன அடங்கலாம்:

ஒரு முறையீட்டை எவ்வாறு செய்வது என்பதைக் கண்டறியப் பின்வரும் இணையதளத்துக்குச் செல்லவும்: eSafety.gov.au/report

eSafety -யிடம் ஒரு முறையீட்டைச் செய்வதற்கு உங்களுக்கு உதவி செய்ய மொழிபெயர்த்துரைப்பாளர் ஒருவர் தேவைப்பட்டால், மொழிபெயர்த்தல் மற்றும் மொழிபெயர்த்துரைத்தல் சேவையை 131 450 என்ற எண்ணிலும் நீங்கள் அழைக்கலாம்.

Last updated: 04/06/2024